விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்ட மைத்திரி!

அதிக அறுவடையை பெறுவதற்காக இரசாயனப் பொருட்கள் பல விவசாயிகளினால் பசளைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறான பசளைகள் காரணமாக சிறுநீரக கோளாறுகளே அதிகம் ஏற்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தாமரை தடாகத்தில் நேற்று இடம் பெற்ற விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டு அதற்கு விஞ்ஞானிகள் தீர்வு வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நாம் இயற்கை மற்றும் அறிவியல் விடயங்களை சமுதாயத்தில் ஊக்குவிக்க வேண்டும்.

அதிக அறுவடையை பெறுவதற்காக இரசாயனப் பொருட்கள் பல விவசாயிகளினால் பசளைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.