- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு
திமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யாத மு.க.ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என வைகோ குற்றம் சாட்டினார்.
கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர் அவரது காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார்.
மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”தமிழக விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம் வெற்றியடைந்துள்ளது. ஆனால் இதற்கு மு.க. ஸ்டாலின் காரணம் அல்ல.
வணிகர்கள் மனமுவந்து தங்களது கடையை அடைத்தது தான் உண்மையான காரணம். தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதை திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்றும் விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என திமுக மத்திய அரசை வலியுறுத்தவில்லை.
நதிநீர் பிரச்சினையிலும் குரல் கொடுக்கவில்லை. ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, ஸ்டாலின் இப்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென கபட நாடகமாடுகிறார். நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கடுமையான வெயில் காரணமாக பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல்களை திறக்க மதிமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.