- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

விரைவில் தேர்தல் வரும் என்று கூறிய கமல்ஹாசனின் கனவு பலிக்காது வைகைசெல்வன் பேட்டி
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன்
தமிழகத்தில் தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆட்கள் வேண்டும்.தமிழகத்தில் மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன் என்றும் கூறினார். சட்டத்தைக் காரணம் காட்டி கட்டாய திருமணம் போல 4 ஆண்டுகள் ஏன் ஆட்சியைத் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக இன்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் தலைமை கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய் வதற்காக மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாகும். ஆனால் நடிகர் கமல்ஹாசன் விரைவில் தேர்தல் வரும் என்று கூறுகிறார். அவர் கனவு உலகில் இருந்து கொண்டு பேசுகிறார். கமல் ஹாசனின் கனவு பலிக்காது.
5 ஆண்டுகள் முழுமை பெற்ற பிறகு தேர்தல் வந்தாலும் அதில் அ.தி. மு.க.தான் மீண்டும் வெற்றி பெறும்.தேர்தலை கண்டு பயப் படும் இயக்கம் அ.தி. மு.க. கிடையாது. பல்வேறு தேர்தல்களில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற் றுள்ளது. இடைத்தேர்தல் களிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.