விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுப்பா ளர் ஐங்கரன் கடந்த திங்கள் இரவு 11 மணியளவில் மாரடைப் பால் உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கான வர்கள் அரச உத்தியோகத்தில் இணைவதற்கும் கல்வியில் அக்கறை செலுத்தவும் காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒரு வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தபோது இரவும் பகலும் மக்களின் பிரச்சனைகளைக்கு செவிமடுத்து சிறந்த செயற்பாட்டாளராக விளங்கியவர் ஐங்கரன் என்றும் தாக்குதல்ளை விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்றபோது சீருடை தரித்து ஆயுதம் ஏந்திப் போராடியவர் என்;றும் கனடாவில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒரு கனடா உதயனுக்குத் தெரிவித்தார்.
இவரின் மறைவிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.