விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு ‘சர்கார்’

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படத்துக்கு ‘சர்கார்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்காமல், இதுவரை ‘தளபதி 62’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, சற்று முன்பு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘சர்கார்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.