60ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியட்டி அழைப்பும்

அமரர். வள்ளிநாயகி இராமலிங்கம் – குறமகள்

இறப்பு : 15 செப்டம்பர் 2016
(காகேசன்துறை) (இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி) நீங்கள் எம்மை விட்டகர்ந்து நாட்கள் 60 கடந்த போதும் உங்கள் நினைவுகளால் நீண்ட பெரும் சோகம் தனை மனதில் சுமந்து மீண்டும் வாரீரோ என எம் மனம் எண்ணித் தவிக்கின்றது ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும் மாண்ட நீங்கள் வரப்போவதில்லை என்று எண்ணுகையில் மனம் அது நிலை கொள்ளாது தவிக்கின்றது நித்தம் நீங்கள் அமரும் நாற்காலியும் உங்கள் வருகைக்காய் இன்றும் காத்திருக்கின்றது நீங்கள் ரசித்த அணில்களும் உணவு பகிர்ந்த குருவிகளும் உங்கள் உணவூட்டருக்காய் காத்திருக்கின்றன வீடு வரும்போது வரவேற்க நீங்கள் இன்றி வெறுமை எம்மை வாட்டுகின்றது மீண்டும் வருவீரோ என உம் உள்ளம் ஏங்குகிறது..


ன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை கார்த்திகை 12ம் நாள் (12-11-2016) சனிக்கிழமை காலை 11:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை ஸ்காபரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசனநிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார்,உறவினர், நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகந}ல் மூலமாக ஆறுதல், கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கும் வானொலி-கள் பத்திரிகைகள், தொலைகாட்சி நிறுவனங்கள் அனைத்துக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவி;த்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள்

தொடர்புகளுக்கு

கண்ணன்: 647- 209 5150
பாபு: 647 767 2704