வல்வை விளையாட்டு கழக மோதலில் 7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்க ளில் இருவர் பிணையில் விடுவிக்க ப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார். கடந்த சனிக் கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு மற்றும் ஊறணி பகுதியில் உள்ள இரண்டு விளையாட்டு கழ கங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 13 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார் ஏழு சந்தேக நபர்களை கைது செய்து நேற்று ஞாயிற் றுக்கிழமை பருத்தித்துறை நீதவானின் வாச ஸ்தலத்தில் முற்படுத்திய போது இருவரை பிணையில் விடுவித்த நீதவான் நால்வரை எதிர்வரும் 21-ம் திகதி வரையும், ஒருவரை எதிர்வரும் 18-ம் வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.