வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக போராடி வருகிறது.