வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

1956 மார்ச் 23இல் உலகின் முதல் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ல் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதில் இந்திய துாதரக அதிகாரிகள் பங்கேற்பது இல்லை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த கொண்டாட்டத்துக்கு, இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது. நல்லெண்ண உறவுக்கு அழைப்பு விடுவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா தெரிவித்தார்.

அவர் கூறும்போது, ‘இந்திய ராணுவ பிரதிநிதிகளை, அழைத்ததற்கு பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே விரும்புகிறது என காட்டத்தான்’ என்றார்.

அழைப்பை ஏற்குமாறு இந்திய அரசும் தெரிவித்ததையடுத்து அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ அதிகாரி சஞ்சய் விஷ்வாஸ்ராவ் தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்று பார்வையிட்டனர். இந்த செய்தியை பாகிஸ்தான் நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு உள்ளன.