- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

வரலாறு காணாத மழை; ஏமன் – ஓமனில் 15 பேர் பலி
மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், ‘மேகுனு’ என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர்.
அரபிக்கடலில் உருவான மேகுனு புயல் தீவிர மடைந்து, ஏமனின், சொகோட்ரா தீவை நேற்று தாக்கியது. அப்போது, கடும் சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து, ஓமனின் சில பகுதிகளையும் தாக்கி, கரையைக் கடந்தது. இதனால், ஓமனின் மூன்றாவது பெரிய நகரமான, சலாலாவில், மணிக்கு, 170 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதுடன், கன மழை கொட்டித் தீர்த்தது. அதாவது 3 வருடத்துக்கு அங்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக, ஏமன் மற்றும் ஓமனில், 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு காரணமாக மின் இணைப்பு, தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.