‘வட சென்னை’ அப்டேட்: விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர், இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளார்.
‘விசாரணை’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ‘வட சென்னை’. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால் படப்பிடிப்பு தேதிகள் தனக்கு ஒத்து வராததால் விஜய் சேதுபதி விலகினார்.
தற்போது அந்தக் கதாபாத்திரத்தில், நடிகரும் இயக்குநருமான அமீர் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”அது ஒரு தீவிரமான கதாபாத்திரம். மற்ற நடிகர்கள் மனதில் இருந்தாலும் அமீர் அதை சரியாகச் செய்வார் என வெற்றிமாறன் நினைத்தார். அமீர் அடுத்த கட்ட படப்பிடிப்புல் இணைந்து கொள்வார்” என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டடார்.
தனுஷ் – வெற்றிமாறன் இணையும் ஐந்தாவது படம் ‘வட சென்னை’. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களோடு, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய இரண்டு படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.