வட்டுக்கோட்டை பகுதியில் வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றில் இருந்தே குறித்த பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்ப ட்டுள்ளன.

இந்நிலையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை குறித்த வயற் காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்று நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.இதனையடுத்து குறித்த ஆயுதங்கள் காணப்படுவது தொடர்பாக குறித்த வயற்காணிக் குரியவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.இதன்படி பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து கிணற்றுக்குள் காணப்பட்ட ஆயுதங்களை மீட்டிருந்தனர். இவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன் படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன் றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார் ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல பழையதாக காணப்பட்டதாகவும் சில ஆயுதங்கள் புதிய ஆயுதங்கள் போல காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாகவும், அவை எக் காலத்திற்குரியது, யாரால் பயன்படுத்தப்ப ட்டது என்பது தொடர்பான விரிவான விசார ணைகள் இடம் பெற்று வருவதாகவும் வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.