- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குரவில் தமிழ் வித்தியாலத்தை சேரந்த கடந்தகால யுத்த்தினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.
இப் பாடசாலை அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் இப் பாடசாலையும் அதை சார்ந்த சழூகமும் இறுதி யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கபட்டுள்ளது. இப் பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் அரசாங்கத்தினால் வழங்கபடும் சீருடையை தவிர மாற்று சீருடை வேண்ட வசியற்றவர்களாக உள்ளனர். எனவே தாங்கள் மாணவர்களுக்கான சீருடைகளை தந்துதவுமாறு தெரிவித்திருந்ததிற்க்கு அமைவாக 100 மாணவர்களக்கான சீருடை துணிகள் வழங்கபட்டுள்ளன.
மேற்படி நிகழ்வில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் உறுப்பினரான க.மயூரன் மற்றும் புதுக்குடியிருப்பு கோட்ட கல்வி அதிகாரியான சின்னத்தம்பி.சுப்பிரமணியேஸ்வரன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க முன்னால் தலைவரான சிறிக்காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்கி வைத்துள்ளனர்.