வடக்கு மாகாண சபையில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் விவகாரத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறுப்பினர் சயந்தன்

வடக்கு மாகாணத்தின் தற்போ தைய அமைச்சர்கள் யார் என்ற கேள்வியுடனும்; டெனீஸ்வரனின் அமைச்சர் விவகாரத்தில் அவருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பான விடயங்கள் நேற்று மாகாண சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சபையில் பலத்த சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன.. இதற்கு காரணமாககத் திகழ்ந்தவர் சபை உறுப்பினரும், சுமந்திரன் எம்பியின் கையாளும் முன்னர் பல தடவைகள் பெண்கள் விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகியவருமான சட்டத்தரணி சயந்தன் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் 126-வது அமர்வு செவ்வாய்கிழமையன்று கைதடி யில் உள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.  அதில் சிறப்புரிமைப் பிரச்சனையொன்றை பேசப்போவதாக உறுப்பினர் கேசவன் சயந்தன் அவைத்தலைவரிடம் கோரியிருந்தார். அதில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை பேசப்போவதாக உறுப்பினர் கேசவன் சய ந்தன் அவைத்தலைவரிடம் கோரியிருந் தார்.

அதாவது மாகாண அமைச்சர் டெனீஸ்வ ரன் தன்னுடைய பதவி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் வழக்கில் மேன்முறையீட்டு நீதி மன்றம், டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமை ச்சராகவே இருக்கின்றார், அவர் அமைச்ச ராகத் தொடர்வதற்கு அனுமதிக்க வேண் டும் என கட்டளை வழங்கியிருக்கின்றது.

அந்த கட்டளை வழங்கப்பட்டுள்ள போதி லும் அவருடைய பதவி இன்னமும் ஒப்படை க்கப்படாமல் அமைச்சருக்கான ஆசன ஒது க்கீடு செய்யப்படாமல் இருக்கின்ற நிலையில் சபை நடவடிக்கைகளை தொடர முடியாது.
இந்தச் சபை மக்களால் உருவாக்கப்பட் டது. இறைமை மக்களிடம் தான் உள்ளது. தங்கள் இறைமையை தங்கள் சார்பில் செய ற்படுத்தவே மக்கள் எங்களை தெரிவு செய்தி ருக்கின்றனர். அவ்வாறு மக்கள் எம்மிடம் கையளித்த இறைமையை நாம் செயற்படு த்தி வருகிறோம். ஆனாலும் மக்கள் எம்மி டம் தந்த இறைமை தொடர்பில் தற்போது வெற்றிடமே காணப்படுகிறது. மேற்குறித்த விடயத்துக்கு பரிகாரம் காணப்படாவிட்டால் இங்கு மேலும் நாங்கள் குந்திக் கொண்டிருப்பது பொருத்தமற்றது. அதற்கமைய இந்தச் சபை டெனீஸ்வரனை அமைச்சராக ஏற்றுக் கொண்டு அவருக்குரிய ஆசனத்தை வழங்க வேண்டும். ஆனாலும் அதனைச் செய்யாமல் இருப்பது தீர்ப்புக் குறித்து பாராமுகமாக இருப்பதாகவே அமை யும். எனவே அவருக்கு அமைச்சருக்கான ஆசனம் வழங்கப்பட்டு சபை தொடர வேண் டுமென தெரிவித்தார்.

குறித்த விடயத்துக்கு முதலமைச்சர் தனது விளக்கத்தை வழங்கிய பின்னர். கரு த்து வெளியிட்ட சயந்தன், இந்த விடயம் குறி த்து உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்து க்கள் வியப்பையும் ஏமாற்றத்தையும் தருகி ன்றதாக குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், நீதிமன்றில் இருக்கின்ற விட யங்களை கவனத்திலெடுத்துச் செயற்பட வேண்டுமென தெரிவித்தார். மேலும் உறுப்பினர் சயந்தன் முதலமைச்சரின் கருத்துக்களை செவிமடுக்காமல் சபையை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமைச்சர் விவகாரம் தொடர்பில் உறுப்பினர் எம்.கே.சிவாஐp லிங்கம், டெனீஸ்வரன் மீது பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்து கருத்து தெரிவித்தபோது அமர்வில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு டெனீஸ்வரன் பதிலளிக்க சர்ச்சைகள் நிறைந்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டி ருந்தன. தமது கட்சி தொடர்பாக விவாதங்க ளும் மேலோங்கி காணப்பட்டது. இதனை யடுத்து இருபகுதிகளாக ஆளும் கட்சி உறு ப்பினர்கள் பேச்சுச் சமரை நடத்தினர். இத னால் சபையில் குழப்பம் ஏற்படவே சபை யின் உறுப்பினர்களின் ஒலி வாங்கிகளை நிறுத்தி உறுப்பினர்களை சமரசப்படுத்திய அவைத்தலைவர் சபையை கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வந்து தொடர்ந்து நடத்தினார்.