வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் ; ஆளுநர் – முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம்

வடக்கு மாகாண அமைச்சரவை எண்ணிக்கையில் பொருத்த மான நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு மாகாண முதலமைச்சரும் விரைவில் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் தொடர்பாக நான்காவது தடவையாகவும் கடந்த திங்களன்று இடம்பெற்ற சபை அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது. அமைச்சரவை தொடர்ர்பாக அவசர கோரிக்கை ஒன்றை எதிர்க்கட்சி தலைவர் தவராசா நேற்று சபையில் கொண்டு வந்தார். மாகாண சபையில் தற்போது உள்ள அமைச்சார்கள் யார் என அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் முதலமைச்சர் மற்றும் டெனீஸ்வரன் மாத்திரம் தான் வகைகூற முடியும் ஏனையவர்கள் பதில் கூற முடியாது. தொடர்ந்தும் மாகாண சபையை அர்த்தமற்ற வகையில் நடத்திச் செல்ல முடியாது என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அவைத்தலைவர், அமைச்சரவை நியமனம் தனியாக செய்ய முடியாது ஆளுநர் முதலமைச்சர் இருவரும் சேர்ந்து தான் வழங்க முடியும். ஆலோசனை முதலமைச்சராலும் நியமனம் ஆளுநராலும் வழங்க முடியும். தற்போதுள்ள அமைச்சர் சபை மேல் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எண்ணிக்கைக்கு மீறியது. நியமனஅதி காரிகளான அவர்கள் அதை முறைப்படுத்த வேண்டும். அதாவது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் அமைச்சரவை எண்ணிக்கையில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் உண்டு. அதை அவர்கள் செய்ய வேண்டும் என சபை தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மாகாணசபையில் ஆளுங்கட்சிக்கு உள்ளேயே எதிர்கட்சி உரு வாகி யுள்ளதால் எதிர்கட்சிக்கு வேலை இல்லை என தெரிவித்து வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார்கள்.

வடக்கு மாகாணசபை யின் 129 ஆவது அமர்வு கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்றது. அதில் அமைச்சரவை தொடர்பான விவாதம் ஆர ம்பித்தது. அப்போது ஆளும் கட்சி உறுப்பின ர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த விடயத்தை நிறுத்துமாறு கோரி னார்கள். ஆனால் தொடர்ந்து வாக்குவாதம் இடம்பெற்றபோது, இந்த அவையில் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி உருவாகியுள்ளது. எனவே எதிர்க்கட்சியாகிய எமக்கு இங்கு வேலை இல்லை. அதனால் வெளி நடப்பு செய்கிறோம் என தெரிவித்து வெளியே சென்றார்கள்.