வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று வடக்கிந்திய பார்பனராகிய பிரஷாந்த் கிஷோரை தங்களை தேர்தலில் வழிநடத்த உள்ளதாக தலைவர் ஸ்டாலின் தெரியப்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று (பிப்.,02) மாலை, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழகம் இழந்துள்ள புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும்; அதற்கான திட்டமிடலுக்கு நமக்கு உதவ, திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல இளைஞர்கள், ‘ஐ-பேக்’ அமைப்பின் கீழ் நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.

பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும், இந்தியன் பேக் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனைகளை வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க., சந்தித்து வெற்றி பெற்றது. பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்காக இந்த நிறுவனம் பணியாற்றியது. அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக இந்நிறுவனம் பணியாற்றியது.
ஜெகன் மோகன் ரெட்டியும் அபார வெற்றி பெற்று, முதல்வராகியுள்ளார். தற்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்காக இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்நிலையில், 2021ல் நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, அரசியல் களத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.