வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் தடையை மீறி நேற்று மீண்டும் வட கொரிய ஏவுகணை சோதனை நடத்தியது. வான் வெளியில் நடுத்தர தூரம் அதாவது 550 கி.மீ தூரம் (350 மைல்) பாய்ந்து சென்று தாக்கும் ‘புக்குக் சாங்-2’ என்ற ஏவுகணையை பரி சோதனை நடைபெற்றது.

இத்தகவலை தென் கொரியா அறிவித்தது. ஆனால் வட  கொரியா இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் சாதித்தது. இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங்-யங் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் இச்சோதனை வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோத னைக்கு அமெரிக்கா, ஜப் பான், தென்கொரியா, உள்ளிட்ட நாடுகள் கண்ட னமும், எதிர்ப்பும் தெரிவித் துள்ளன.