வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவர்மீது வங்கதேசத்தில் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக சின்ஹா உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு கமிஷன் வங்க தேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலபதிர்கள் இருவர் போலி ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும் அந்த தொகை முழுவதும் சின்ஹாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தாகாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் முன்னாள் தலைமை நீதிபதி சின்ஹா உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்யும்படி நீதிபதி கே.எம்.எம்ரல் கயேஷ் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சின்ஹாவுக்கு வங்க தேச போலீசார் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளனர்.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சின்ஹா வங்க தேச அரசுக்கு எதிராக சிலகுற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அதில் தற்போதைய அவாமி லீக் தலைமையிலான அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுவ தாகவும் வங்கதேசத்தில் ஜனநாயக விரோத செயல்களையும் சர்வாதிகார போக்கையும் எதிர்த்ததற்காக தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் அவருக்கு எதிராக தற்போது கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.