- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்
லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பொதுமக்கள் சிலர் அந்த மர்ம மனிதனை பார்த்து அலறியடித்து ஒடினர். தகவலறிந்த ஆயுதமேந்திய ரோந்து போலீசார் அந்த மர்ம மனிதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சுற்றி வளைத்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது.
மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அல்லாக்கு அக்கபோர் என்றும் சத்தம் போட்டாரா, மேலும் இது ஒரு பயங்கரவாத தாக்குதலா? என்ற பல கேள்விகளுக்கு போலீஸ் பிறகு பதில் சொல்லும்.