ரூ. 2 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னைமெரினா கடற்கறையில் உள்ள எம்ஜிஆர் சமாதிவளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள்மற்றும் அதிமுக பிரமுகர்கள் நேற்று முன் தினம் வரைவந்து சென்றனர்.   இந்த நிலையில் தஞ்சையில்அதிமுக பிரமுகர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில்கட்டி உள்ளார். தஞ்சை மேல வீதியை சேர்ந்தசாமிநாதன் என்பவர் 18-வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர்.  மேல வீதி கொங்கணேஸ்வரர் கோயில் அருகே ரூ. 2 லட்சம் செலவில் மறைந்தஜெயலலிதாவுகு கோயில் கட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-   என்னை போன்று சாதாரண தொண்டர்களுக்கு பதவிகொடுத்து அழகு பார்த்தவர். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது.

கடந்த 7ஆம் தேதி அவருக்கு கோயில் கட்டும் பணியை தொடங்கினேன். விரைவில் 2அடியில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை வைக்கப்படும்.   இந்த கோவிலை தஞ்சைதெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வைத்திலிங்கம் எம். பி.

ஒரிரு நாட்களில் திறந்து வைக்க உள்ளார், என்று கூறினார்.