- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்
ஐதராபாத்:
பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற ஆந்திரபாபு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, திடீரென இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார்.
ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால், நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது திறக்கிற ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் சில மணி நேரமே இயங்குகிற நிலையில், பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உயர்மதிப்பு நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற சந்திரபாபு நாயு தற்போது விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பணம் விவகாரம் பிரச்சினை என்னை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு என்ன தீர்வு காணலாம் என தினமும் 2 மணி நேரமாவது யோசித்து பார்க்கிறேன். ஆனால், நான் தலைகுனிவதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என எனக்கு விடை காண முடியவில்லை என்று கூறினார்.மோடியின் திட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு முதன் முதலாக எதிரான கருத்தை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.