- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும்
ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தோனேஷியா பண நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் (சிஏஏ) தவறு ஒன்றும் இல்லை. காங்., கட்சியும், மகாத்மா காந்தியும், சிஏஏ.,வை வலியுறுத்தியிருந்தனர். 2003ல் மன்மோகன் சிங்கும் பார்லி.,யில் இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது அதை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் பாக்., முஸ்லிம்களுக்கு சிஏஏ எதிராக உள்ளது எனக்கூறி காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.