- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்
அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பபடுவது காலாச்சார தேசியவாதம் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: அயோத்தியில் கோவில் உருவாவது ஒரு மத விவகாரம் அல்ல. அதே நேரத்தி்ல் கலாச்சார விழிப்புணர்வுக்கானது.ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசிய வாத்திற்கானது. கோவில் கட்டப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார்.
மேலும் மதச்சார்பின்மைக்காக கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்கள் குறித்து அவர் கூறுகையில் மதசார்பின்மை என்ற பெயரில் தேசியவாதத்தையும், கலாச்சார தேசிய வாதத்தையும் அடக்க முடியாது . ராம் கோவிலின் கட்டுமானம் இந்தியாவில் கலாச்சார தேசியவாதத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனவும் நாட்டின் மேற்கத்திய மனநிலையை மாற்றும் எனவும் கூறினார்.