ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமருக்கு வாழ்த்துக்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என 1992ல் ஜெயலலிதா பேசியுள்ளார். என தெரிவித்துள்ளார்.