ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபாவில், இந்தாண்டில், 66 இடங்கள் காலியாவதால், பா.ஜ.,வுக்கு, மேலும், 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ, BJP, ராஜ்யசபா தேர்தல், Rajya Sabha election, மனோகர் பரீக்கர்,Manohar Parrikar, தேர்தல் கமிஷன் ,Election Commission, ஹர்தீப் சிங் புரி, Hardeep Singh Puri, பார்லிமென்ட், Parliament,Bharatiya Janata Party,

இதனால், ராஜ்யசபாவில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும், எளிதில் நிறைவேறும் சூழ்நிலை ஏற்படும்.ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கர், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2020 நவ., 25ல் முடிகிறது.

கோவாவில் நடந்த சட்ட சபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற மனோகர் பரீக்கர், ராணுவ அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனால், காலியான, ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, சமீபத்தில், தேர்தல் கமிஷன் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய, நாளை கடைசி நாள்; 6ம் தேதி, மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

இந்த தேர்தலில் போட்டியிட, தனி அதிகாரத்துடன் கூடிய, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இந்த தேர்தலில், ஹர்தீப் சிங் புரிக்கு போதிய, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதால், அவர், நிச்சயம் வெற்றி பெறுவார் என, கூறப்படுகிறது.

இந்தாண்டில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 66 ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிக்காலம்முடிவடைகிறது. தற்போது, பா.ஜ., – காங்., கட்சிகளின், ராஜ்யசபா உறுப்பினர் பலம், சரி சமமாக, 57 ஆக உள்ளது. இந்தாண்டில் காலியாகும், ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு கூடுதலாக, 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தாண்டின் இறுதியில், ராஜ்யசபாவில், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம், 72ல் இருந்து, 63 ஆகக்குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், உ.பி., மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், பா.ஜ., சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளதால், அக்கட்சியின், ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பலம் கணிசமாக அதிகரிக்கும்.

இதனால், பார்லிமென்டில் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவது, மத்திய அரசுக்கு எளிதாகும். தற்போதைய லோக்சபாவில், ஆளும், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இடங்கள் இருந்தாலும், ராஜ்யசபாவில் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால், பல மசோதாக்களை நிறைவேற்றுவதில், பா.ஜ., அரசு, இடையூறுகளை சந்தித்தது.

இந்தாண்டு இறுதிக்குள், ராஜ்யசபாவில், பா.ஜ., பலம் கணிசமாக அதிகரிப்பதால், மசோதாக்கள் நிறைவேற்றம் எளிதாகும் என, கூறப்படுகிறது.

நாடு முழுவதும், 16 மாநிலங்களில், ஏப்ரல் மாதத்தில், 59 ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிகள் காலியாகின்றன. உ.பி.,யில் மட்டும், 10 எம்.பி.,க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. உ.பி.,யில், ராஜ்யசபா, எம்.பி., பதவி களுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ.,விற்கு, எட்டு இடங்கள்கிடைக்கும் நிலை உள்ளது.