ராஜித கூறுவது பொய்! வாகனம் சட்ட ரீதியானது என்கிறார் நாமல்

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட தனது வாகனம் சட்ட ரீதியானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனமானது, 50 ஆயிரம் டொலரைக் கொடுத்தே கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசினால் வழங்கப்படும் வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.