- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்
இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்
கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர்.இதனால் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர். இதனையடுத்து இலங்கை பார்லியை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார்