ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: பா.ஜ

காங்., தலைவர் ராகுல் இந்தியாவில் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார். இவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

ரபேல் விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ராகுலும், பாகிஸ்தானும் விரும்புகிறது. மோடியை இந்திய அரசியலில் இருந்து நீக்க ஆசைப்படுகின்றனர். இது நடக்காது. காரணம் இந்திய மக்கள் மோடி பக்கம் உள்ளனர்.

இரு தரப்பும் விரக்தியிலும் உள்ளன, மேலும் ஒரே எண்ணம் கொண்டதாக உள்ளன. இந்தியாவில் ராகுல் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தானும், ஊழலையும் வாரிசு அரசியலையும் விரும்புபவர்களும் தான் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பத்ரா கூறினார்.