ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ், இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இவர் கடந்த ஒரு மாத காலம் அதிபர் விளாடிமிர்புடினை நேரில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளும் ‘கொரோனா’ வைரஸ் புகுந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகளவில் இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.