ரஷ்யாவின் ஐ.நா., தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் மரணம்!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா நாட்டு தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் நியூயார்க் நகரில் காலமானார்.

மறைந்த சுர்க்கினுக்கு இன்று 65-வது பிறந்த நாளாகும். இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவர் மன்ஹாட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சுர்க்கின் உயிரிழந்தார்.

இந்த செய்தி கேட்டதும் ரஷ்ய அதிபர் புதின் மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். ராஜிய உறவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த சுர்க்கின் திடீரென உயிரிழந்தது தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளதென்றும், தனது 65வது பிறந்த நாள் ஒரு நாள் முன்பு இறந்து விட்டதாக புதின் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான ரஷ்யா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு, சர்வதேச அரசியல் அரங்கில் ஆதரவை திரட்டியதில், சர்க்கின் பெரும்பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.