ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு தனது அறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி திலக் மாரப்பனை குழுவை நியமித்தது.குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிணைமுறி மோசடி விடயத்தில் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் பங்கு இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியுள்ள வேளையில், ரணில் விக்கிரமசிங்க உடனடியாக ரவி கருணாநாக்காவை வெளியேற்றுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று மற்றுமொரு சிரேஸ்ட உறுப்பினர் கருத்து வெளியிட்டார்.