- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி
எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், அங்கு சுமை தூக்கும் கூலியாக உள்ள ஸ்ரீநாத், கேரள அரசு நடத்தும் சிவில் தேர்வில் வெற்றியடைந்து விரைவில் பணியில் அமர உள்ளார்.
பொதுத்தேர்வுகளுக்கு படிப்பவர்கள் என்றாலே, எப்போதும் தங்களை சுற்றி புத்தகங்களுடன் இருப்பார்கள் என்ற நிலையை ஸ்ரீநாத் தகர்த்தெறிந்துள்ளார். ஸ்ரீநாத், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில், சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சாதித்து உயரிய பணியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஸ்ரீநாத், அதற்கான வழிகளில் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருந்தார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேசன்களில் இலவச வை-பை சேவையை அறிமுகப்படுத்தியது.
தலையில் சுமைகளை தூக்கி வந்த ஸ்ரீநாத், காதில் மொபைல் போனின் இயர்போன்களை மாட்டிக்கொண்டு இலவச வை-பையின் உதவியால்,இணையதளம் மூலமாக பாடங்களை, ஸ்ரீநாத் படிக்க துவங்கினார். தொடர்முயற்சியின் காரணமாக, கேரளா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர் விரைவில், நில வருவாய் துறையில் உதவியாளராக பணியமர உள்ளார்.
அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆனால் இதோடு தனது தேடலை நிறுத்தப்போவதில்லை. தனது லட்சிய தேடல் தொடரும் என்று தெரிவித்துள்ள ஸ்ரீநாத், ரயில்வே துறையில் 62 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.