ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பத்து நிபந்தனைக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று பாராளுமன்ற சபாநாயகர் கருஜய சூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

ஐக்கிய தேசியகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது. இப்படியாக பாராளுமன்றத்தின் நாட்களும் மணித்தியாலங்களும் தங்கள் சலுகைகளை தக்கவைப்பதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை வீணடிக்கப்படுகின்றன என்பதே தற்போதைய இலங்கை அரசியலில் உள்ள ஓட்டைகள் என்றுநாம் துணிந்து கூறலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குச் செய்கின்ற நெட்டூரம் கொஞ்சமல்ல. எல்லாவற்றிலும் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலேயே அவர்களின் காலம் கடந்து போகின்றது. சில வேளைகளில் இவற்றை நினைக்கும் போதெல்லாம் எங்கள் ஊழ்வினை இப்படியாக வந்துற்றதோ என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுக் கொடூரம் எல்லை தாண்டிச் செல்கிறது.

சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்பது முதல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்புதல் பெறுவதற்காக பத்து நிபந்தனைகள் முன்வைத்தது என்ற அறிவித்தல்வரை அனைத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றுவதென்றால் இதற்கொரு முடிவே இல்லையா? இதுபற்றி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களோ அன்றி கூட்டமைப்பின் இதரகட்சியினரோ தட்டிக் கேட்பதற்குத் திராணி அற்றவர்களாக இருக்கின்றனரா? என்பதுதான் தெரியாமல் உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தபோது அதற்கு எதிராக வாக்களிப்பதற்குக் கூட்டமைப்பினர் பத்து நிபந்தனைகளை முன்வைத்தனர். அந்த நிபந்தனையில் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க கையயழுத்திடுவார் என்றும் கூறப் பட்டது. பத்து நிபந்தனைகளையும் பிரதமர் ரணில் ஏற்றுக் கொள்வதாலேயேதாம் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் கூறப் பட்டது.ஆனால் இப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையயழுத்திடவில்லை என்றும் அவருடன் ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஐயா! சம்பந்தப் பெருமானே உங்கள் கூட்டமைப்புக்குள் என்னதான் நடக்கிறது என்பதை நீங்களாவது வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சியின் அதிகாரங்கள் உங்களிடம் இருக்கிறதா? அல்லது அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா போலத்தான் நீங்களும் இருக்கிறீர்களா? என்பது எமக்குத் தெரியாமலே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நீங்கள்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள்; கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள். இப்போது எங்கள் கேள்வி நீங்கள் மூவர் மட்டுமாவது சந்தித்து சிந்தித்து ஊடக வியலாளர்கள் மூலமாக மக்களுக்குத் தகவல் சொல்வதில்லையா? என்பதுதான். பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவதை நீங்கள் மறுக்கிறீர்கள். மாவை சேனாதிராசா மறுக்கிறார். ஈற்றில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவதே சரியானதாகஅமைந்துவிடுகிறது. இவைஏன்தான் என்று புரியவில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இந்தப் பிரபஞ்ச உலகில் தர்மம் தோற்றதாக வரலாறில்லை. அதர்மம் வெல்வது போலஎ ழுந்துநின்று ஆடும். அந்தஆட்டந்தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைத் தாங்கள் உணர்ந்தால் அதுபோதும்.” இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரி தனது ஆதங்கத்தை வெளிட்டுள்ளது.