- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் பதவி: லைக்கா நிறுவன முன்னாள் நிர்வாகி நியமனம்
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக லைக்கா நிறுவனத்தில் தலைவராக இருந்த ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் ஓய்வை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி தங்களை முன்னிருத்த பலரும் முயன்று வருகின்றனர். ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்றோர் அதிமுகவை வழி நடத்திச் செல்கின்றனர். மறுபுறம் ஒற்றை மனிதராக டிடிவி தினகரன் தனியாக அதிமுகவினருக்கு சவாலாக இருந்து வருகிறார்.
இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று 1996 முதல் கூறிவந்த ரஜினிகாந்த் கடந்த டிச.31 தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் 2021 சட்டபேரவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும், அதுவரை யாரையும் நாம் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
மறுபுறம் நடிகர் கமல்ஹாசனும் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து சுற்றுப்பயணத்தையும் துவங்க உள்ளார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் முழுநேர அரசியல் என்று அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவரும் வரும் 21-ம் தேதி கட்சியின் பெயர், நிர்வாகிகளை அறிவிக்க உள்ளார்.
நடிகர் விஷாலும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார். நடிகர் விஜயும் சத்தமில்லாமல் தனக்கான ஆதரவு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தீவிரமாக தனது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை அறிவிக்க உள்ளார். இதனிடையே லைக்கா நிறுவனத்திலிருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்து ரஜினியை சந்தித்து ஆதரவு தெரிவித்த ராஜுமகாலிங்கத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
லைக்கா நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து ராஜு மகாலிங்கம் விலகியது முதல் ரஜினியுடன் உள்ளார்.
பல மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் ஆலோசனை உள்ளிட்டவற்றில் பங்கேற்ற ராஜு மகாலிங்கம் ரஜினிமக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று வெளியான அறிவிப்பு ஒன்றில் ராஜுமகாலிங்கம் மாநிலச் செயலாளர் ரஜினி மக்கள் மன்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஆரம்பகால மன்ற நிர்வாகி சத்திய நாராயணா, தற்போதைய நிர்வாகி சுதாகர் போன்றவர்களை தாண்டி இப்பதவி அளிக்கப்பட்டுள்ளது.