ரஜினி பாஜகவில் சேர்ந்தால் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் பேட்டி

ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி: ‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றுகின்றன. ப.சிதம்பரம் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக சிலர் கூறுவது தவறானது.
அதிமுக இணைந்தாலும், உடைந்தாலும் கவலையில்லை. பிற கட்சிகளின் உட்கட்சி விவ காரத்தில் பாஜக தலையிடாது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். பாஜக வுக்கு வந்தால் சந்தோஷமாக வரவேற்கிறேன். திமுக தன்னை மேலும் வளர்க்க நினைக்கிறது. ஆனால், செய்த தவறுகளை மறைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.