- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி
டிச.31-ல் ரஜினி புத்தாண்டு வாழ்த்து வேண்டுமானால் சொல்வார். அரசியல் பிரவேசம் பற்றி சொல்வாரா என்று கூற முடியாது. எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம் என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம் ரஜினியின் அறிவிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
”ரஜினிக்கு அரசியல் புதிதல்ல, அதை அவர் அறியாதவரும் அல்ல. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். மோடி பிரதமராக போட்டியிடும் முன் 5 லட்சம் கிலோ மீட்டர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அது போன்று செயல்பட ரஜினியின் உடல் நிலை இடம் கொடுக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. 35 வயதில் விட்டதை 65 வயதில் பிடிக்க முடியுமா தெரியாது.
96-ல் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்தான் ரஜினிகாந்த். அவர் திரும்ப வருவாரா? மிக வேகமாக ஓடுவாரா? அதற்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா எனக்கு தெரியாது. ஒரு எம்.எல்.ஏ ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டால் சரி. முதல்வராக வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயம். அவருக்கு கடவுள் அருள் இருந்தால் முடியும்.
ரஜினி 31-ந்தேதி செய்தி சொல்வார் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரிந்து அவர் அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்வதை விட ஹாப்பி நியூ இயர் என்று தான் சொல்வார் என்று நினைக்கிறேன்.
ரஜினி திரைப்படம் வெளியாகும் நேரத்தில் அரசியல் பற்றிப் பேசுவார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனோ ஒவ்வொரு தடவையும் அப்படி நடக்கிறது. ரஜினி குறித்து அமிதாப் பேசலாம். தமிழருவி மணியன் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. அரசியல் பிரவேசம் அறிவிப்பு அவர் அறிவிக்கும் வரை உலகத்தின் மிகப் பெரிய சூதாட்டமாகத்தான் இருக்கும். ரஜினிக்கு பாஜக ஆதரவு தருமா என்பதை அமித்ஷா தான் முடிவு செய்வார்”.
இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.