ரஜினி, அஜித்தை முந்திய ‘பைரவா’ விஜய்யின் சாதனை

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் ‘பைரவா’ டிரைலர் புதிய சாதனையைப்

படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. ‘பைரவா’ படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள்தான் யு டியூபில் அதிக சாதனை படைக்கும் என அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், ‘தெறி’ படத்தின் மூலமே இணையதளப் போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என விஜய் ரசிகர்கள் நிரூபித்தார்கள்.

‘பைரவா’ படத்தின் டீசர் வெளிவந்து புதிய சாதனைகளைப் படைத்தது. இப்போது ‘பைரவா’ படத்தின் டிரைலர் வெளிவந்து தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. மற்ற மொழி மீடியாக்கள் கூட ‘பைரவா’ படத்தின் டிரைலர் சாதனையைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

‘பைரவா’ டிரைலர் சாதனையை முறியடிக்க ‘2.0’ படத்தால் மட்டுமே முடியும் என விஜய் ரசிகர்கள், வேறு யாருக்கோ சவால் வேறு விடுகிறார்கள்.