யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியை தொடர பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவன் ஒரு வன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்ததி யாகேஸ்வரன் நிலாபவன் (வயது16) என்ற மாணவனே மேற்படி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.தசாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார். அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறு பேற்றில் சிறந்த பெறு பேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நீர் வேலியில் உள்ளதனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி நின்று யாழ் நகர்ப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர கல்வி கற்று வருகிறார்.யாழ்ப்பாண பாடசாலையில் அவருடைய கல்வியை தொடருமாறு பெற்றோர் தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்றுஇரவு 7.30 மணிக்கு தனது தாயுடன் குறித்த மாணவன் தொலை பேசியில் கதைத்ததாகவும்,அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலையில் உயர்தரத்தை தொடரலாம் நாம் குடும்பமாக யாழ்ப்பாணத்தில் வசிப்போம் என தாயார் கூறியதாகவும் அதற்கு மாணவன் மறுப்பு தெரிவித்ததுடன் தான் கிளிநொச்சியில் தான் கற்ற பாடசாலையிலேயே கற்க வேண்டும் என தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து; அன்றையதினம் இரவு 11.30 மணிக்கு குறித்த மாணவன் வாந்தி எடுத்த போது,. அப்போது பெரியம்மா ஓடிபோய் அவனிடம் விசாரித்தபோது எதையும் கூற மறுத்துவிட்டான் உடனடியாக 12 மணிக்கு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விசாரணகளிலிருந்து தெரிய வந்துள்ளது

அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப் பியபோது செல்லும் வழியில் மயக்கமடைந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோது குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் இவர் நச்சுதிரவம் உட்கொண்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் என்ன திரவம் என்பதை அறிவதற்கு இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனுடைய அறையில் உலகம் வெறுத்துவிட்டது வாழ பிடிக்கவில்லை என எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் பொலி ஸார் கைப்பற்றியுள்ளனர்.