யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தி;ன் பட்டதாரியான இவர் அங்கு சிரேஸ்ட கணித விரிவுரையாளராகவும் விஞ்ஞான பீடாதிபதியாகவும் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரி பழைய மாணவரான இவர் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப-வேந்தரும் உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் துரைராஜா காலத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தாய்ச்சங்கத்தில் பல பதவிகளை வகித்து வந்தவர் ஆவார்.

பல கல்விமான்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட இந்த உப- வேந்தர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவரும் தகுதியானவருமான போராசிரியர் எஸ். சற்குணராஜா நியமனம் பெற்றுள்ளமை, உலகெங்கும் வாழும் உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு உற்சாகம் தரும் செய்தியாகும். தகவல்:- டாக்டர் த. வசந்தகுமார்