யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

Jaffna Hindu College Association- Canada, presented its Annual Cultural Show, named “Kalaiyarasi”. today at Chinese Cultural Centre, located in Scarborough.As usual, the show was fantastic and Hall was “fully packed” until the end.
We enjoyed the comedy Drama, produced and staged by the Canada- Jaffna Hindu Ladies College old Girls Association.
கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி விழா இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் நாம் அங்கு சென்றபோது இரவு 10.00 மணி ஆனால் மண்டபத்தில் ரசிகர்கள் முழுமையாக அமர்ந்திருந்து அப்போது மேடையேறிய நகைச்சுவை நாடகம் ஒன்றைப் பார்த்து ரசித்து கரகோசம் செய்து சிரித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். நாமும் அந்த நகைச்சுவை நாடகத்தால் கவரப்பட்டு மண்டபத்தில் அமர்ந்திருந்தோம்.
மேற்படி நாடகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கனடா பழைய மாணவிகள் சங்கத்தினரால் மேடையேற்றப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் பழைய மாணவர்களும் நண்பர்களுமாகிய திருவாளர்கள் கேதா நடராஜா மற்றும் விலோசன் சிவதர்மன் ஆகியோரது அழைப்பை ஏற்று அங்கு சென்ற நாம் நல்லதோர் கலைவிழாவை முழுமையாக பார்த்து ரசிக்க ஏனைய நிகழ்ச்சிகள் எமக்கு வரிசையாக அமைந்து தடையாக இருந்துவிட்டனவே என்ற கவலையும் எம்மை வாட்டியது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் கலை இலக்கியத்திலும் மேன்மை பெற்றது. அத்துடன் பல ஈழத்து எழுத்தாளர்கள் இந்துக் கலலூரியின் பழைய மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நடத்தும் வருடாந்த “கலையரசி” கலைவிழா, கனடாவில் தரம் வாய்ந்த விழாக்களில் ஒன்றாகவும், அவற்றுள் முதலிடத்தைத் தட்டிக் கொள்ளும் தகைமையும் பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.