யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தாம் ஆய்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்.தமிழர்களின் கலாசார தலைநகர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம், நீண்ட கிரிக்கெட் வரலாற்றைக்  கொண்டிருக்கின்ற போதிலும், 1970களில் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் வடக்கில் எந்தவொரு சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களும் அமைக்கப்படவில்லை.இந்த நிலையிலேயே தற்போது மண்டைதீவில் சர்வதேச தரம்வாய்ந்த மைதானத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு முன்னர் ஆனையிறவை அண்டியுள்ள பகுதிகளில் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்திகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.