யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இலலாத ஊரில் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள்..

யாழ்ப்பணத்திற்கு சென்றுவரும் புலம் பெயர் அன்பர்கள் “யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்குது” என்று வாய் இனிக்க பகிர்ந்து கொள்வார்கள்.
தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 வீதி வழியாகவோ அன்றி பூநகரி பாதை வழியாகவோ சென்றால் பிரதான வீதிகள அழகாகவும் விசாலமாகவும் அமைக்கபபட்டிருககின்றன. இதனால் நன்மையடைபவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் ஏழை மக்கள் அல்ல. வெளிநாடுகளிலிருந்து அங்கு பயணிப்போர், அதனிலும் மேலாக தென்னிலங்கை சுற்றுலாப்; பயணிகள், தென்னிலங்கை முதலீட்டாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வீதி வழியாக தங்கள் முகாம்களுக்கு தேவை நிமித்தம் பயணிக்கும் படையினர்.
தற்போது தென்னிலங்கை முதலீட்டாளர்கள் பலர் யாழ்பபாணத்தில் பல வர்த்தக முயற்சிகளில் முதலிட்டுள்ளார்கள். பல அரசாங்க ஒப்பந்தங்கள் கூட சிங்கள கொந்தராத்துக் காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே அவர்களுக்;கும் சாதகமான வீதிப் போக்குவரத்து வசதிகள் வேண்டும்.
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் யாழ்பபாணத்திலிருந்து குறிக்கட்டுவான வரையும் பாதை அழைகாகவும் விசாலமாகவும் உள்ளது. காரணம் தென்னிலங்கை பௌத்தர்கள் நயினாதீவில் அமைந்திருக்கும் பௌத்த விகாரைக்கு சென்று வருவதற்கு வசதியாகவே.
இவ்வாறு பலவற்றை விளக்கமாகச் சொல்லலாம்.
அண்மையில் எமது கனடா உதயன் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் அமைந்துள்ள காளி அம்மன் தேவஸ்த்தானத்தில் நடைபெறும் வருடாந்த உறசவத்தில் கலந்து கொண்டார்கள். அருகில் வீடுகளில் மக்கள இல்லை. வீடுகள் இருந்த அடையாளமே தெரியாமல் பற்றைகள் வளர்ந்தும் முற்செடிகள் “குத்துவோம்” என்ற தோரணையில் நீட்டிக் கொண்டும் வீதிகளின் இருமருங்கும் உள்ளன.
திருவிழாக்களில் கலந்து கொள்ள யாழ்பபாணத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் மக்கள் வருகின்றார்கள்
வீதிகள் செப்பனிட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.. அந்த வீதிகளில் பயணித்த போது அடைந்த சிரமங்கள் எங்கள் அனைவரையும் நன்கு பாதித்தன. மாகாண சபைக்கு அதிகாரங்களும் நிதியும் இருந்தால் இப்படி இருக்குமா? மாகாண சபையை தமிழ் மக்களே விமர்சிக்கும் சந்தர்பபத்தை மைத்திரி அரசு ஏற்படுத்தியுள்ளது.
மொத்த்தில் யாழ்ப்பாணத்தில் உட்கிராமஙகள் அனைத்து புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன.
கனடா உதயன் செய்திப் பிரிவு