யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்களை இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளரும், ஜேர்மன் நாட்டுத் தலைவருமான இ. இராஜசூரியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சிறப்புத் தலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் பெரியசாமி இராதாகிருஸ்ணன் அவர்கள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு தேவையான நிதியின் பெரும்பகுதியை வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள். இங்கே காணப்படும் படத்தில் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இராதாகிருஸ்ணன், இ. இராஜசூரியர், மற்றும் தினகரன் பிரதம ஆசிரியர் திரு செந்தில்வேலவர் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதைக் காணலாம்.