- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்?
ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக அவர் மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்க மார்க்சிஸ்டு ஆலோசித்து வருகிறது.
இதுபற்றி மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணம் செல்லாது என்ற முக்கிய கொள்கை முடிவை பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வெளியே அறிவித்தார். இதையடுத்து ஜனாதிபதி, மோடியை வரவழைத்து இதுபற்றி விவாதித்தார். இதுபோன்ற நிலையில், பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வந்து இதுகுறித்து விளக்கம் அளித்து இருக்கவேண்டும். அது அவருடைய பதவியின் கடமையும் ஆகும்.
ஆனால் அதை பிரதமர் செய்யவில்லை. இது பாராளுமன்ற அமைப்பு முறையை அவமதிப்பது போல் உள்ளது.
எனவே, இது தொடர்பாக மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்டு வருகிறோம். இதுபற்றி அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம்.