மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா, இந்தியாவாக உள்ளது. அவரை போன்ற இரும்பு மனிதர் இல்லையெனில் வன்முறையால் நாடு துண்டாடப்பட்டிருக்கும். இந்தியாவிற்கு மோடியின் தலைமையும், தமிழகத்திற்கு பழனிச்சாமியின் தலைமையும் தேவை.

நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு இல்லை. அதிமுக ஆதரிக்கும் எல்லா திட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக.,விற்கு நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என சிறிதளவு எண்ணம் கூட கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் அதையே செய்கிறது. படிக்கும் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும். மோடி தற்போது, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்