மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

இராஜாங்கப் பயணமாக இந்தியா சென்ற சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்!
முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்… பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.

சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது, உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.கடந்த காலங்களில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய குற்றவாளிகளை இந்தியாவிடம் சவூதி அரசு ஒப்படைத்துள்ளது.முன்னதாக பாகிஸ்தான் சென்ற சவூதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகள் இடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இரு நாடுகளும் உடன்படிக்கை செய்துக் கொண்டன. புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் சவூதி அரேபியா அரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்திய மத்திய வெளியுறவுத்துறை தகவலின் படி புதன் இரவு 11.30 மணியளவில் முகமது பின் சல்மான் இந்தியாவில் இருந்து விடைபெற்றார் என தெரிகிறது. முகமது பின் சல்மானின் இந்த 30 மணி நேர இந்தியா சுற்றுப்பயணத்தில் புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்றும் இளவரசர் தெரிவிப்பு

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சவூதி அரேபியா துணையாக இருக்கும் என்று சவூதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்த அவர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மா முன்னிலையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த ஒப்பந்தங்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி தனது பேச்சில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து நாங்கள் இதில் பேசினோம். இருநாட்டு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்த சந்திப்பு உதவும். இரண்டு நாடுகளும் பல வருடங்களாக நட்பு நாடுகளாக இருந்துள்ளன.

தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டு இருக்கிறோம். இதுகுறித்து நாங்கள் இருவரும் விவாதம் செய்தோம். தீவிரவாத வளர்ச்சி நாடுகளை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.நமது பிராந்தியத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சவூதி – இந்தியா சேர்ந்து நடவடிக்கை எடுக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, தாக்குதல், சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை தகவல்கள் அனைத்திலும் இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட உறுதி கொண்டு இருக்கிறோம். பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.இதையடுத்து பேசிய சல்மான், தீவிரவாதமும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையில் அனைத்து உதவிகளையும் சவூதி இந்தியாவிற்கு செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இந்தியாவிற்கு மட்டுமில்ல அனைத்து அண்டை நாட்டிற்கும் சவூதி இப்படி உதவும். இதில் இந்தியாவின் செயல்பாட்டை பாராட்டுகிறோம் என்று சல்மான் கூறியுள்ளார்.