மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் விடியலைத் தேடி அமைப்பின் ஆதரவில் இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் அவரது அன்னை சாரதா ஆகியோர் மொன்றியால் வாழ் வர்த்தக நண்பர்கள் வழங்கிய ஒத்துழைப்போடு நடத்திய “விடியலைத் தேடி” இசை நிகழ்சசி கடந்த சனிக்கிழமை 24ம் திகதி மாலை மொன்றியால் நகரின் மேரி ஆன் உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
மொன்றியால் நகரில் உள்ள ஆற்றல் மிகு பாடக பாடகிகள் மற்றும் நடன மணிகள் அத்துடன் ந◌ாடக நடிகர் ஆகியோர் மேடையில் தங்கள் படைப்புக்களைத் தந்தனர்.
அத்துடன்; ரொரன்ரொவிலிருந்து கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் “வைகைப் புயல்” பாலாவோடு இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சியையும் வழங்கினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது பாரியார் மற்றும் பேத்தி தியானா ஆகியோரோடு மொன்றியாலுக்கு பயணித்து கலந்து சிறப்பித்தார்.அத்துடன் சாரதா மற்றும் கௌரீஸ் ஆகியோரின் தன்னலமற்ற சேவையையும் பாராட்டி உரையாற்றினார்.

நிகழ்ச்சி தொடங்கி இறுதிவரையும் மேடையில நடனம் நாடகம் பாடல் நிகழ்ச்சி மூத்தோர் மற்றும் ஊடக நிறுவனங்களின் கௌரவம் ஆகியனவும் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்பட்ட நிதியான தாயகத்தில் விழிப்புலன் அற்ற இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் தேவைகளுக்காக அனுப்பப்படும் என்ற அறிவிப்பும் விடுக்கபபட்டது.