மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலயம் என்னும் திருத்தலம் தற்போது வட அமெரிக்காவில் முருக பக்தர்கள் நாடிச் செல்லும் ஒரு ஸ்தலமாக திகழ்கின்றது. இதற்குக் காரணம் இந்த ஆலயத்தை அமைக்கும் முயற்சிகளில் நன்கு திட்டமிட்டு இயங்கிய பல அன்பர்களே ஆவார்கள்.
இந்த ஆலயம் அமைக்கும் பணியில் ஆரம்பத்தில் பல துறைகளைச் சார்ந்த பல பக்தர்கள் முன்னின்று உழைத்தார்கள். அவர்களில பொறியியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என பல அன்பர்கள் ஆலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துளளார்கள். இன்று இந்த ஆலய ஆலயம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு ஆலயமாகவும் திகழ்கின்றது.
இது இவ்வாறிரு;க்க, கடந்த 18ம் திகதியன்று காலை மேற்படி ஆலய நிர்வாகக் குழுவில் முக்கிய பங்கு வகிபபவரும், மொன்றியால் மாநகரில் “மார்சே மாருதி” என்னும் வர்த்தக நிறுவனத்தின் மூலம் வர்த்தக்த் துறையில் புகுந்தவரும் தற்போது அங்கு புருட் ஹபி என்னும் அனைத்து சமூகத்தவர்களும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லுகின்ற ஒரு சுப்பர் மார்க்கட் நிறுவனத்தின் பங்காளர்களில் ஒருவராத் திகழ்பவருமான திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்கள் மீது மிக மோசமான தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள்து.
மேற்படி தாக்குதலை நடத்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் பிரன்ச் மொழி பேசும் வெள்ளை நிறத்தவர்களே. அந்த தாக்குதல் குழுவில் அடங்கிய மூன்று வெள்ளைக்காரர்களும் மூன்று நாட்களாக திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்களை பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால் தாக்குதல் நடைபெற்ற தினம் காலை அவரது இல்லத்திற்கு முன்பாகவே தாககுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் இரும்புக் கம்பிகளினால் தலையை நோக்கி தாக்குதல் நடத்தபபட்டுள்ளது. திரு (ஸ்ரீ) சண்முகலிங்கம் அவர்கள்; மிகவும் சாதுர்யமாக தாக்குதலில் இருந்து ஆபத்தான காயங்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதல் நடைபெற்ற வேளை அவரது மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.
இது இவ்வாறிருக்க இந்த தாக்குதலுக்கும் விரைவில் நடக்கப் போகின்ற மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கும் தொடர்பு இருப்பதாக கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ள எல்லா விபரங்களையும் தற்போது இங்கே பதிவு செய்வதை நாம் தவிர்க்க வேண்டிய அவசியம் எம்மால் உணரப்படுகின்றது. ஏனென்றால் மேற்படி தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த 2017-2019 காலப் பகுதிக்கான நிர்வாக சபை உறுபபினர்கள் தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 15ம் திகதிக்;கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்படி ஆலய வளாகம் எவ்வாறான சூழ்நிலையில் இருக்கப்;போகின்றது. இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்தவர்கள் ஆலய வளாகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதை அவதானிக்கவும் செய்திகள் சேகரிக்கவும் கனடா உதயன் செய்தியாளர் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.