மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில்கடந்த பல ஆண்டுகளாக இயங்கும் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் வருடாந்தநத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் நகரில் நடைபெற்றது.

இணையத்தின் தலைவி திருமதி பாமதி லிங்கராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மேற்படி விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் சிலரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கமும் ஒருவர்.

மிகவும் அழகிய விழாவாக இடம்பெற்ற மேறபடி கொணடாட்டத்தில் இளம் மற்றும் குழந்தை நட்சத்திரஙகளின் கலை மற்றும் கல்வி சார்ந்த ஆற்றல்களைகண்டு நாம் வியந்தபடி ரசித்தோம். வர்த்தகப்பிரமுகர் ஏ.எம்ஆர் பலசரக்குமாளிகை திரு ராஜ்கோபால் உட்பட நான்கு சேவையாளர்கள் மேடையில் கௌரவிககப்பட்டார்கள்.

“அகரம்” வானொலி ஸ்தாபகர் திருமதிரஞ்சினி இரஞ்சன் அறிவிப்பாளராக பணியாற்றினார். மேற்படி விழாவில் மொன்றியால் நகரில் வாழும் இளம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களின் கலைத் திறன்களையும் மேடையேற்றினார்கள். அனைத்தும் பாராட்டுக்குரியவையாகவே அமைந்தன.