மைத்திரியின் அரசுக்கு ரணில் பக்கபலமாக உள்ளாரா?

இலங்கையில் தற்போதைய ஜனாபதி மைத்திரி பால சிறிசேனாவின் அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சியை இணைக் கட்சியாக வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துகின்றது. இந்த அரசின் மீதான விமர்சனங்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் முன்வைக்கப்பட்டபோது, அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய மைத்திரியின் ஆட்சிக்கு ரணில் என்னும் பிரதமர் எந்தளவிற்கு பலமாக உள்ளார்? ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு உள்ளது? போன்ற தலைப்புக்களில் கருத்துக் கணிப்பை நடத்தியது ஒரு சிங்கள இணைய ஊடகம். இந்த கருத்துக் கணிப்பின்படி பிரதமர் ரணிலுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள செல்வாக்கு போன்றவை குறைவாகவே காணப்படுகின்றது என்றும் ரணிலின் அரசியல் தலைமைத்துவம் மங்குகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த அடிப்படையில் பார்த்தால் ஜனாதிபதி மைத்திரி இனமேல் ரணிலை நம்பியிருந்தால் அதோகதிதான் என்றும் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு உதவிப் பணமான கோடிகளில் உல்லாச வாழ்க்கை வாழும் ரணில் போன்றவர்களை மக்கள் புறக்கணிக்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதே உண்மை.